தென்னாப்பிரிக்கா TO மும்பை…ரூ.24 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல்: விமான நிலையத்தில் சிக்கிய நபர்..!!

Author: Rajesh
14 April 2022, 2:57 pm

மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.24 கோடி மதிப்பிலான ஹெராயினை கடத்திய தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மராட்டிய மாநிலத்தின் மும்பையில் உள்ள சத்ரபதி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு போதை பொருளை கடத்தி கொண்டு நபர் ஒருவர் வருகிறார் என ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக சென்று விசாரணையில் ஈடுபட்டனர். இதில், சிவப்பு நிற பை ஒன்றை தள்ளி கொண்டு வந்த தென்ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த நபரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.

அந்த பையில், 4 போதை பொருள் பொட்டலங்கள் வைக்கப்பட்டு இருந்துள்ளன. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். அதுபற்றிய விசாரணையில், ஹெராயின் வகை போதை பொருள் என தெரிய வந்தது. அதன் எடை 3.980 கிலோ இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.24 இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அந்த நபரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்