கண்ணிமைக்கும் நேரத்தில் அதிவேகமாக வந்த லாரி டிராக்டர் மீது மோதி கோர விபத்து : 100 மீட்டர் தூரம் இழுத்து சென்ற டிராக்டர்.. 5 பேர் பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2022, 2:46 pm

பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது லாரி மோதி பயங்கர விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம் சூரியா பேட்டை மாவட்டம் முனுகல மந்தல கிராமம் அருகே அதே கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு நடைபெற்ற ஐயப்ப சாமி பூஜைக்கு சென்று சென்று இன்று அதிகாலை டிராக்டரில் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர் திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி, டிராக்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்து ஏற்பட்டபோது லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. எனவே மோதிய வேகத்தில் டிராக்டர் சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிராக்டரில் பயணித்தவர்களில் ஐந்து பேர் உடல் நசுங்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்த சூரியா பேட்டை போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!