லயோலா கல்லூரியில் வெடித்தது ஹிஜாப் சர்ச்சை : முதலாமாண்டு கல்லூரி மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு… போராட்டத்தால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan17 February 2022, 11:26 am
ஆந்திர மாநிலம் விஜயவாடா லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வகுப்புகளுக்கு செல்ல இன்று அனுமதி மறுக்கப்பட்டது. ஹிஜாபை அகற்றி விட்டு வந்தால் மட்டுமே வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கூறிவிட்டது.
இதனால் மாணவிகள் கல்லூரி எதிரில் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த இஸ்லாமியர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முதலாவது ஆண்டு முதல் ஹிஜாப் அணிந்து வரும் எங்கள் குழந்தைகளை கல்லூரி நிர்வாகம் திடீரென்று ஹிஜாப் அணிய கூடாது என்று கூறுவது ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் ஆந்திரா முழுவதும் மாணவ மாணவிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் ஆந்திர மாநிலம் முழுவதும் பரவாமல் தடுக்கும் முயற்சியில் ஆந்திர மாநில கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.