தோண்ட தோண்ட கிடைக்கும் உடல்கள்… இமாச்சலை அடுத்தடுத்து உலுக்கும் நிலச்சரிவு… இதுவரையில் 60 பேர் பலி..!!!

Author: Babu Lakshmanan
16 August 2023, 10:06 am

இமாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரையில் 60 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய புனித தலங்களுக்கு செல்லும் சாலை நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளன. இதனால் ஆன்மீக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. குறிப்பாக, இமாச்சல பிரதேசம் சிம்லாவில் அடுத்த அடுத்த ஏற்பட்ட நிலசரிவுகளில் இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், பலர் இடுபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இமாச்சலில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிர் பலி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ