இந்து கடவுள் குறித்து சர்ச்சை பேச்சு… முட்டு கொடுக்கும் ஆளும்கட்சி.. சபாநாயகருக்கு எதிராக நாயர் சமூகத்தினர் கண்டன பேரணி..!!
Author: Babu Lakshmanan3 August 2023, 2:18 pm
இந்து கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சபாநாயகருக்கு எதிராக நாயர் சமூகத்தினர் கேரளாவில் கண்டன பேரணி நடத்தினர்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட கேரள மாநில சபாநாயகர் ஷம்சீர், இந்து கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. அவரது கருத்துக்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு, அவர் பதவி விலக வேண்டும் என்று கூறி போராட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில்,இந்து கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சபாநாயகருக்கு எதிராக நாயர் சமூகத்தினர் கேரளாவில் கண்டன பேரணி நடத்தினர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கண்டன பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, கேரள சபாநாயகர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டிய அவசியல்லை என, கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.