பன்றி புகைப்படத்துடன் உதயநிதி போட்டோ… அண்டை மாநிலத்தில் இந்து அமைப்பினர் கொடுத்த பரபரப்பு புகார்..!!

Author: Babu Lakshmanan
4 September 2023, 2:28 pm

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் திருப்பதியில் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது இந்தக் கருத்திற்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பதியில் உதயநிதி ஸ்டாலினை பன்றியுடன் ஒப்பிட்டு படங்களுடன் எதிர்ப்பு தெரிவித்தனர். திருப்பதி பல்கலைகழக காவல் நிலையத்தில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சனாதன தர்ம பாதுகாப்பு சமிதி நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

அதில் நாட்டில் அமைதியை சீர்குலைத்து அதன் மூலம் தேர்தலின் போது, அரசியல் ஆதாயம் தேடும் உதயநிதி ஸ்டாலினை தீவிரவாதி என அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகார் அளித்தனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 693

    0

    0