‘இந்துத்துவா’ பரிசோதனை கூடமானது உத்தரகாண்ட் மாநிலம் : பொது சிவில் சட்டம் அமல் குறித்து கார்த்தி சிதம்பரம் காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2024, 2:45 pm

‘இந்துத்துவா’ பரிசோதனை கூடமானது உத்தரகாண்ட் மாநிலம் : பொது சிவில் சட்டம் அமல் குறித்து கார்த்தி சிதம்பரம் காட்டம்!

பொது சிவில் சட்டத்தை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

நாட்டிலேயே உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த சட்டம் முதன்முதலாக கொண்டு வரப்பட்டுள்ளது. அம்மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பொது சிவில் சட்டம் கொண்டு வந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டு உள்ளார்.

அதில் கூறியிருப்ப தாவது:-உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் ‘இந்துத்துவா’ பரிசோதனை கூடமாக உத்தரகாண்ட் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…