அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது.. மீண்டும் பட்ஜெட் தாக்கல் : பிரதமர் மோடி கூறிய முக்கிய விஷயம்!
Author: Udayachandran RadhaKrishnan31 January 2024, 11:36 am
அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது.. மீண்டும் பட்ஜெட் தாக்கல் : பிரதமர் மோடி கூறிய முக்கிய விஷயம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் முன்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களைத் தாண்டி நாடு முன்னேறி வருகிறது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இன்று ஜனாதிபதி உரை, நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் இது மகளிருக்கான சக்தி.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்.
கடைசி கூட்டத்தொடர் என்பதால் இதை யாரும் புறக்கணிக்க வேண்டாம். நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது மகத்தான சாதனை. குடியரசு தின விழா அணிவகுப்பில் பெண்களின் வலிமை குறித்து பறைசாற்றப்பட்டுள்ளது.
மக்களவைத்தேர்தலுக்குப்பின் பா.ஜ.க. அரசு மீண்டும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.மக்களின் ஆசியுடன் இந்த பயணம் தொடரும், இவ்வாறு அவர் பேசினார்.