விடுமுறை முடிந்தும் விடாத பக்தர்கள் : இலவச தரிசனமா? 20 மணி நேரம் காத்திருங்க… திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிரம்பி வழியும் கூட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan25 June 2022, 12:51 pm
திருப்பதி : கோடை விடுமுறை முடிந்தும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறையாத நிலையில் இலவச தரிசனத்திற்காக 20 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்கின்ற்னர்.
கோடை விடுமுறை நாட்கள் முடிந்த நிலையில் கூட திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது. இதனால் இன்று காலை நிலவரப்படி சுமார் 20 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை இலவசமாக வழிபட வேண்டிய நிலை நிலவுகிறது.
மேலும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவுகள் வெளியான நிலையில் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற பெற்றோர்களுடன் வந்திருப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் இலவச தரிசனத்திற்காக 20 மணிநேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் காத்திருப்பு அறைகளில் 64 அறைகளும் நிரம்பிய நிலையில் 3 கிலோ மீட்டர் வரை வரிசையில் பக்தர்கள் காத்துள்ளனர்.
இதனால் தற்போது வரும் பக்தர்களுக்கு 20மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால், 300 ரூபாய் சிறப்பு தரிசன தற்காக 3 மணியில் இருந்து 4 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் வெள்ளி, சனி ,ஞாயிறு கிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து செய்வதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதிக கூட்டம் காரணமாக லட்டு தட்டுப்பாடு இருப்பதால் பக்தர்களுக்கு 2 லட்டு மட்டுமே வழங்கப்படும் என தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.