சுழற்சி முறையில் பிரதமர் பதவி… அப்படி நடந்தால் இண்டி கூட்டணி தாக்கு பிடிக்குமா..? அமித் ஷா கேள்வி..!!

Author: Babu Lakshmanan
17 May 2024, 12:12 pm

இந்தியாவுக்கு வலிமையான பிரதமர் தேவை என்றும், ஆண்டுக்கு ஒரு பிரதமர் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் மதுபானி மக்களவை தொகுதியில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது :- இண்டியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு ஆள் இல்லை. மோடியை 3வது முறையாக பிரதமராக்க நாடு முடிவு செய்து விட்டது. ஆனால், இண்டியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா..?

மேலும் படிக்க: இளைஞர் மீது ஆம்னி பஸ் ஏறி விபத்து… மறித்துப் போன மனிதாபிமான செயலால் பறிபோன உயிர்… அதிர வைக்கும் சிசிடிவி காட்சி

அவர்கள் எப்படியும் ஆட்சியை பிடிக்க போவதில்லை. இருந்தாலும் ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். மம்தா பானர்ஜி பிரதமர் ஆவாரா? மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆவாரா? லாலுபிரசாத் பிரதமர் ஆவாரா?அவர்கள் பிரதமர் பதவியை ஆண்டுக்கு ஒருவர் வீதம் தங்களுக்குள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

மீண்டும் கொரோனா போன்ற சூழ்நிலை வந்தால், அவர்களால் நாட்டை காப்பாற்ற முடியுமா? பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க முடியுமா?இந்தியாவுக்கு வலிமையான பிரதமர் தேவை. ஆண்டுக்கு ஒரு பிரதமர் தேவையில்லை. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடை விதித்தது சரியான முடிவு, எனக் கூறியுள்ளார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 337

    0

    0