கட்சி நிர்வாகிகளுக்கு ஓரினச்சேர்க்கை டார்ச்சர்.. 22 நாட்களுக்கு பிறகு முன்னாள் பிரதமரின் பேரனுக்கு ஜாமீன்!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2024, 1:07 pm

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தாக தொண்டர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமரின் பேரனுக்கு ஜாமீன் கிடைத்தது.

கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டம், அரகலகூடுவைச் சேர்ந்த வாலிபர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில், ம.ஜ.த., – எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணா, ஜூன் 23ம் தேதி கைது செய்யப்பட்டார். சி.ஐ.டி., போலீசார், அவரை காவலில் எடுத்து விசாரித்தனர்.

பின், ஜூலை 3ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சூரஜ் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவரின் ஜாமீன் மனுவுக்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையடுத்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. நீதிமன்றத்தின் உத்தரவு நகலை, அவரது வழக்கறிஞர்கள், நேற்று காலை சிறை நிர்வாகத்திடம் வழங்கினர்.

இதனால், 22 நாட்கள் சிறை வாசத்துக்கு பின், நேற்று சூரஜ் ரேவண்ணா வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த பின், அவர் கூறியதாவது:

எனக்கு எதிராகவும், என் குடும்பத்தினருக்கு எதிராகவும் சிலர் சூழ்ச்சி செய்கின்றனர். ஆனால், உண்மையை எப்போதும் மறைக்க முடியாது. என் மீது நடந்த சூழ்ச்சிக்கு யார் காரணம் என்பது குறித்து விரைவில் பகிரங்கமாகும்.

நான் எதையும் பார்த்து, அஞ்சி ஓடிப்போக மாட்டேன். விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்துள்ளேன். நாட்டின் நீதி துறை மீது நம்பிக்கை உள்ளது.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!