சத்தியமாக இனி கூட்டணி மாறவே மாட்டேன்.. நிதிஷ்குமார் பேச்சை கேட்டு குலுங்கி சிரித்த பிரதமர் மோடி!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2024, 8:41 pm

சத்தியமாக இனி கூட்டணி மாறவே மாட்டேன்.. நிதிஷ்குமார் பேச்சை கேட்டு குலுங்கி சிரித்த பிரதமர் மோடி!

பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் முதல்வர் நிதிஷ் குமாருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று 21,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நம்புவதாக தெரிவித்தார்.மேலும் இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

பீகார் முதலமைச்சராக பதவி வகிக்கும் நிதிஷ் குமார் கடந்த பிப்ரவரியில், ராஷ்டீரிய ஜனதாதள கட்சி தலைமையில் மகா கூட்டணியில் இருந்து விலகி,பாஜவுடன் இணைந்திருந்தார்.

10 வருடத்தில் 7 முறை அவர் கூட்டணி மாறியிருந்த நிலையில் இந்த பேச்சை கேட்டு பிரதமர் மோடி சிரித்தது பார்வையாளர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

  • Virat Kohli fake video அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!