கர்நாடகாவுடன் ஓசூரை இணைக்க வேண்டும்.. இல்லைனா ஒரு இன்ச் கூட மெட்ரோ திட்டம் நகராது : வாட்டாள் நாகராஜ் வார்னிங்!

Author: Udayachandran RadhaKrishnan
31 August 2024, 4:47 pm

பெங்களூருவிலிருந்து சந்தாபுரா வரை அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் வழிதடத்தை அத்திப்பள்ளி வழியாக தமிழகத்தின் ஒசூர் வரை 23 கிமீ தூரத்தை நீட்டிக்க கர்நாடகா அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதற்காக தமிழக அரசும் இத்திட்டத்தை தொடங்குவதற்காக ஆய்வு பணிகள், நிதி ஒதுக்கீடு என மும்முரம் காட்டி வரும் நிலையில்

கன்னட சலுவளி, கன்னட ரக்சன வேதிகே ஆகிய கன்னட அமைப்பினர் தமிழகத்திற்கு மெட்ரோ ரயில் நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்தும் பெங்களூர் கிராம புற மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்கக்கோரி

ஒசூர் அடுத்த கர்நாடகா – தமிழக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்

ஒசூரிலிருந்து கர்நாடகா நோக்கி வரக்கூடிய வாகனங்களை தடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்..

முன்னதாக பேட்டியளித்த வாட்டாள் நாகராஜ்:

ஒசூர், கர்நாடகா மாநிலத்துடன் இணைக்க வேண்டும். காமராஜ் ஆட்சியில் தான் ஊட்டி, ஒசூர் தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டும்.. ஒசூர் இணைத்த பிறகு தான் மெட்ரோ திட்டம் நீட்டிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் ஒரு இன்ச், ஒரு அங்குலம் கூட நீட்டிக்க அனுமதிக்க மாட்டோம் மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு அனுமதியளிக்காவிட்டாலும், மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டாலும் மக்கள் நாங்களே கட்டும் பணியில் ஈடுபடுவோம்

பெங்களூருவில் சிறந்த சர்வதேச விமான நிலையமாக தேவேகவுடா விமான நிலையம் உள்ள நிலையில் ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்கிற ஸ்டாலின் உத்தரவை கண்டிக்கிறோம் என்றார்..

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!