சிறுநீரால் பிசைந்த மாவில் சப்பாத்தி.. உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

Author: Hariharasudhan
17 October 2024, 6:30 pm

உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் தனது சிறுநீரால் மாவு பிசைந்து சப்பாத்தி செய்து கொடுத்த பணிப்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

காசியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள ரிபப்ளிக் காவல் நிலையத்திற்கு, கடந்த திங்கள்கிழமை பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், காசியாபாத்தில் நாங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்கள் வீட்டில் ரீனா என்ற பெண் கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக எங்களது குடும்பத்தில் அனைவருக்கும் வயிற்று உபாதைகள் ஏற்பட்டது. அதிலும், சொல்லி வைத்தது போன்று அனைவருக்கும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து பரிசோதனை செய்ததில், மருத்துவமனையிலேயே எப்படி இவ்வாறு வந்தது என தெரியவில்லை எனக் கூறினர்.

அதேநேரம், கடந்த சில மாதங்களாக எங்களது வீட்டில் உள்ள மளிகைப் பொருட்களும் காணாமல் போயிருந்தது. ஆனால் அப்போது கூட எங்களது வீட்டு பணிப்பெண் ரீனா மீது சந்தேகம் எழவில்லை. ஏனென்றால், அவர் பல ஆண்டுகளாக எங்கள் வீட்டில் பணிபுரிந்து எங்களது நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்தார்.

எனவே, நாங்கள் சமையலறையில் மொபைலை வைத்து வீடியோ எடுத்துப் பார்த்தோம். அதில் எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீடியோவில், எனது வீட்டு பணிப்பெண் ரீனா, அவளது சிறுநீரைக் கொண்டு மாவு பிசைந்து அதில் எங்களுக்கு சப்பாத்தி செய்து கொடுத்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இதனையடுத்து, கிராஸிங் ரிபப்ளிக் காவல் நிலைய போலீசார் ரீனாவைப் பிடித்து விசாரித்தனர். அதற்கு அவர் மறுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவைக் காண்பித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் மறுப்பு தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

இதையும் படிங்க : கூட்டணிக்கு இழுக்கிறாரா பவன் கல்யாண்? இபிஎஸ் – ஓபிஎஸ்-க்கு ஒரே நேரத்தில் வாழ்த்து!

இதனையடுத்து ரீனா மீது பாரதியா நியாய் சன்ஹிதா சட்டப்பிரிவு 272-இன் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 276

    0

    0