திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள்… Housefull ஆன திருப்பதி : 40 மணி நேரம் காத்திருந்து தரிசனம்…தலைசுற்ற வைத்த ஒரு நாள் எண்ணிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2022, 10:56 am

ஆந்திரா : பக்தர்கள் வருகை மிகவும் அதிகரித்துள்ள காரணத்தால் திருப்பதி மலையில் திரும்பிய பக்கமெல்லாம் மனித தலைகளாகவே காணப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. நேற்று முதல் மிகவும் அதிகரிக்க பக்தர்கள் எண்ணிக்கை இன்று மேலும் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் திருப்பதி மலையில் திரும்பிய பக்கமெல்லாம் மனித தலைகளாகவே காணப்படுகின்றன. இலவச தரிசனத்திற்காக திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கும் 32 கம்பார்ட்மெண்ட்களும் பக்தர்கள் கூட்டம் காரணமாக நிறைந்து வழிகின்றன.

மேலும் அங்கிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவு வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே பக்தர்கள் வரிசையில் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.இதனால் சுமார் 40 மணி நேரம் காத்திருந்து இலவசமாக தரிசிக்க வேண்டிய நிலை நிலவுகிறது.

மேலும் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு பக்தர்கள் தங்களுடைய கனங்களிலும், திறந்த வெளிகளிலும் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அறைளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அவற்றை ஒதுக்கீடு செய்யும் கவுண்டர்கள் ஆன பத்மாவதி விருந்தினர் மாளிகை கவுண்டர், மத்திய வரவேற் நிலைய கவுண்டர் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

இந்நிலை மேலும் சில நாட்கள் நீடிக்கலாம் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் குடிநீர், உணவு ஆகியவற்றை வழங்கி வருகிறது.

பக்தர்கள் வருகை அதிகரித்த காரணத்தால் அதற்கு ஏற்ற வகையில் லட்டு பிரசாத உற்பத்தி முடுக்கி விடப்பட்டுள்ளது. தேவஸ்தான உயரதிகாரிகள் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு இயன்ற வரையில் விரைவாக சாமி தரிசன சாமி தரிசன வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ஏழுமலையானை 88 ஆயிரத்து 748 பக்தர்கள் தரிசித்துள்ளனர். அவர்களில் 46 ஆயிரத்து 400 பக்தர்கள் இலவச தரிசனம் மூலமும், 25 ஆயிரத்து 819 பக்தர்கள் 300 ரூபாய் தரிசன மூலமும்,கட்டண சேவை டிக்கெட்டுகள் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் மூலம் 16529 பக்தர்களும் ஆக மொத்தம் 88 ஆயிரத்து 748 பக்தர்கள் நேற்று ஏழுமலையானை வழிபட்டனர்.

நேற்று ஏழுமலையானின் உண்டியல் வருமானம் 4 கோடியே 82 லட்சம் ரூபாய். ஏழுமலையானுக்கு தலைமுடி சமர்ப்பித்து மொட்டை போட்டு கொண்ட பக்தர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 558 பேர் ஆகும்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 1287

    0

    0