எப்படி அமித்ஷா அதை யோசிக்காம விட்டார்? விதி மீறல்.. வழக்குப்பதிந்த போலீசார்..!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2024, 2:29 pm

எப்படி அமித்ஷா அதை யோசிக்காம விட்டார்? விதி மீறல்.. வழக்குப்பதிந்த போலீசார்..!!

தெலுங்கானாவில் 17 தொகுதிகளுக்கும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதனால், காங்கிரஸ், பா.ஜ.க, பிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

காங்கிரஸ் சார்பில் ராகுல், கார்கேவும், பாஜ.க, சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: SPECIAL CLASS இருக்கா.. பள்ளிகளுக்கு வந்த திடீர் ஆர்டர் : பள்ளிக்கல்வித்துறை ACTION!!

இந்நிலையில் மே 1ம் தேதி தெலுங்கானாவில் நடந்த ‛ரோடு ஷோ’வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.

இந்தப் பேரணியின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், குழந்தைகளை பங்கெடுக்க வைத்ததாகவும் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் புகார் அளித்தது. இதன் அடிப்படையில் அமித்ஷா உள்ளிட்ட 5 பேர் மீது தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • adhik-ravichandran-shared-that-after-aaa-movie-flop-no-actors-were-ready-to-meet-me-but-ajith-kumar-said-okay-to-his-film AAA படத்துனால என்னைய யாரும் பார்க்க விரும்பல, ஆனா? -மனம் நெகிழ்ந்து பேசிய ஆதிக் ரவிச்சந்திரன்