கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரைவார்த்தது… உண்மையை வெளியே கொண்டு வந்த தகவல்.. பிரதமர் மோடி ட்வீட்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2024, 11:50 am

கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரைவார்த்தது… உண்மையை வெளியே கொண்டு வந்த தகவல்.. பிரதமர் மோடி ட்வீட்!!

கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, ஐம்பது ஆண்டுகள் மவுனமாக இருந்து கொண்டு, தேர்தல் நேரத்தில் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு குறித்துப் பேசும் மு.க.ஸ்டாலின் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

மேலும், கச்சத்தீவு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பெற்ற தகவலை குறிப்பிட்டு பிரமதர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரைவார்த்தது என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது. காங்கிரஸை நாம் ஒரு போதும் நம்ப முடியாது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்த காங்கிரஸ் கட்சி 75 ஆண்டுகளாக உழைத்து வருகிறது என பதிவிட்டுள்ளார்.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!