ED சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் இருந்து கட்டு கட்டாக பணம் சிக்குவது எப்படி? பிரதமர் மோடி கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2024, 8:54 pm

ED சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் இருந்து கட்டு கட்டாக பணம் சிக்குவது எப்படி? பிரதமர் மோடி கேள்வி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இந்த நிலையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பிரதமர் மோடி மீண்டும் பாஜக வெல்லும் , 400 தொகுதிகளுக்கு மேல் கட்டாயம் வெற்ற பெறும் என்றும் பாஜக மட்டும் 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என பேசினார்.

தொடர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய பிரதமர், அழிவுப்பாதையை நோக்கி காங்கிரஸ் செல்கிறது. முன்பு காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு அதிகமாக இருந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது. கொரோனா காலத்திலும் கூட விலைவாசியை கட்டுக்குள் வைத்துள்ளோம்.

விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் 2.80 லட்சம் கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்படுவது ஏன்? பாஜக ஆட்சியில் 1 லட்சம் கோடியை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆயிரம் கோடி மட்டுமே அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டு இருந்தது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

  • Mammootty replaced in Baasha Movieரஜினியுடன் மம்முட்டி நடிக்க வேண்டிய இன்னொரு படம்.. பறிபோன வாய்ப்பு!
  • Views: - 306

    0

    0