ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம்.. மனித விரலுடன் Delivery ஆனதால் அதிர்ச்சியில் உறைந்த பெண்..!

Author: Vignesh
13 June 2024, 1:44 pm

மும்பையில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட பட்டர் ஸ்காட்ச் கோன் ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ஒர்லெம் பிரெண்டன் செர்ராவ்(27) என்ற பெண் ஆன்லைன் டெலிவரி செய்யும் செயலின் மூலம் ஐஸ்கிரீம் ஆடர் செய்துள்ளார்.

ஆர்டர் செய்தபடி ஐஸ்கிரீம் வந்த நிலையில், ஆவலுடன் ஐஸ்கிரீம் பேக்கை திறந்து பார்த்தபோது ஐஸ் கிரீமைக்குள் மனிதவிரல் கிடந்துள்ளது. இதை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, Yummo ஐஸ்கிரீம் நிறுவனம் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் மனித விரலை கண்டெடுக்கப்பட்ட ஐஸ்கிரீம் நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

ice cream

ஐஸ்கிரீமில் கண்டெடுக்கப்பட்ட மனித உறுப்பை தடையவியல் ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன், ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட இடத்தை போலீசார் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இந்த விஷயம், தொடர்பாக விசாரணை தீவிர படுத்தியுள்ளோம் என்று காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கோன் ஐஸ்கிரீமுக்குள் மனித விரல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!