மனைவியை கட்டிப்பிடித்துக் கொண்டு ரயில் முன் பாய்ந்த கணவன் : ஷாக் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2023, 3:57 pm

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மெட்ரோவின் நோபரா ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை மனைவியைத் தூக்கிக்கொண்டு ரயிலில் குதித்து கணவர் தற்கொலைக்கு முயன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நோபரா ரயில் நிலைய நடைமேடையில் அந்த தம்பதியர் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். முன்னால் மனைவி நடந்து செல்ல அவர் பின் கணவர் நடந்து செல்கிறார்.

அப்போது தண்டவாளத்தில் மெட்ரோ ரயில் வரவும், நடைமேடையில் நடந்து சென்ற தன் மனைவியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அவரின் கணவர் மெட்ரோ ரயில் முன் குதிக்கிறார்.

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் குதித்த தம்பதியரை, அங்கிருந்த மெட்ரோ ஊழியர்கள் உடனடியாகக் காப்பாற்றியுள்ளனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கவி சுபாஷிலிருந்து தக்னேஷ்வர் வரையிலான மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக ரயில்வே துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த தற்கொலை முயற்சியில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 632

    0

    0