விட்டுச்சென்ற ஆம்னி பேருந்து… திரும்பி வரக் கூறி அடம்பிடித்த ஆளுங்கட்சி பெண் பிரமுகரின் கணவர் : ட்ராவல்ஸ் ஊழியர்களை தாக்கி அராஜகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2022, 2:37 pm

ஆந்திரா : தாமதமாக சென்ற பேருந்தை திரும்ப வர வழைக்க கோரி தனியார் டிராவல்ஸ் ஊழியர்களை அடித்து துவைத்த ஆந்திர ஆளும் கட்சி கார்ப்பரேடரின் கணவரின் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூர் நகராட்சி கார்ப்பரேட்டேர் ஹேமா. அவருடைய கணவர் சுரேஷ். வெளியூர் செல்வதற்காக சுரேஷ் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் இருக்கை ஒன்றை முன்பதிவு செய்திருந்தார்.

ஆனால் அவர் தாமதமாக அங்கு சென்றார். எனவே பேருந்து புறப்பட்டு சென்று விட்டது. இதனால் அங்கு சென்று பார்த்த சுரேஷ் கார்ப்பரேடரின் கணவரான எனக்கே இந்த நிலையா என்று வெகுண்டெழுந்தார்.

கோபம் தலைக்கேறிய அவர் புறப்பட்டு சென்ற பேருந்தை திரும்ப வரவழைத்து என்னை அதில் ஏற்றி அனுப்ப வேண்டும் என்று மிரட்டல் விட தொடங்கினார். ஒரு கட்டத்தில் நான் யார் தெரியுமா என்று கேட்ட சுரேஷ் அங்கு உள்ள ஊழியர்களை கடுமையாக தாக்கினார்.

அடுத்த பேருந்தில் ஏற்றி அனுப்புகிறேன் என்று ஊழியர்கள் அவரை சமாதானம் செய்தனர். ஆனால் நான் அதே பேருந்தில் தான் செல்வேன் என்று அடம் பிடித்தார். இந்த நிலையில் அங்கு வந்த கார்ப்பரேட்டர் ஹேமா கணவரின் செயலுக்கு ஊக்கம் கொடுத்து ஊழியர்களை கடுமையாக மிரட்டினார்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். இது தொடர்பான அனைத்து காட்சிகளும் டிராவல்ஸ் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியது.

இந்த நிலையில் போலீசில் புகார் அளித்தால் மீண்டும் வந்து தாக்குவேன் என்று சுரேஷ் ஊழியர்களை மிரட்டி சென்றார். நடந்த சம்பவம் பற்றி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் சிசிடிவி பதிவு காட்சிகள் ஆதாரத்தின் அடிப்படையில் ஏலூர் போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

  • actress sona shared about issue between vadivelu and her வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்