காரில் வைத்து 17 வயது மாணவி கூட்டு பலாத்காரம்… வெளியானது அதிர்ச்சி சிசிடிவி காட்சி… ஒருவன் கைது… எம்எல்ஏ வாரிசு உள்பட 4 பேருக்கு வலைவீச்சு!!

Author: Babu Lakshmanan
4 June 2022, 9:15 am

தெலுங்கானாவில் 17 வயது பள்ளி மாணவியை காரில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து வெளியான சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐதராபாத் நகரில் உள்ள ‘பப்’ எனப்படும் மதுபான விடுதியில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் 17 வயது மாணவி, தனது நண்பர்களுடன் கலந்து கொண்டார். விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் வீடு திரும்ப முயன்றனர். அப்போது, அந்த 17 வயது சிறுமியை சக நண்பர்கள் வீட்டில் இறக்கி விடுவதாகக் கூறி காரில் வருமாறு அழைத்துள்ளனர்.

அந்த சிறுமியும் நண்பர்கள்தானே என நம்பி அவர்களுடன் காரில் சென்றார். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் காரை நிறுத்திவிட்டு, மாணவர்கள் ஒவ்வொருவராக அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

This image has an empty alt attribute; its file name is image-108.png

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு நேர்ந்த கதியை போலீசில் புகாராக அளித்துள்ளார். அதனடிப்படையில் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதனிடையே, ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் காரை நிறுத்திவிட்டு அந்த மாணவியுடன் மாணவர்கள் செல்லும் சிசிடிவி காட்சி சிக்கியது.

இதன்மூலம், மாணவர்கள் மீதான குற்றம் ஏறத்தாழ உறுதியான நிலையில், 5 பேரை போலீசார் தேடி வந்தனர். இவர்களில் ஒருவன் கைது செய்யப்பட்டார். மேலும், அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரும் மாணவர்கள் என்பதும், அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அதில் ஒரு மாணவன் எம்.எல்.ஏ.,வின் மன் என்பதும் தெரியவந்து உள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 878

    0

    0