அதிவேகமாக வந்த கார்.. சுருட்டி வீசப்பட்ட 3 பெண்கள்.. வாக்கிங் சென்ற போது நிகழ்ந்த கோர விபத்து ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!
Author: Babu Lakshmanan4 July 2023, 2:35 pm
ஐதராபாத்தில் அதிகாலையில் வாக்கிங் சென்ற பெண்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐதராபாத்தில் உள்ள ஹைதர்சாக்கோட் சாலையில் அதிகாலை வேளையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், இன்று அதிகாலை சுமார் 6.10 மணியளவில் ஹைதர்சாக்கோட் சாலையில் 3 பெண்கள் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களுக்கு பின்புறம் வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்து மோதியது. இதில் காரோடு சுருட்டி வீசப்பட்டதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.