நள்ளிரவு போதை பார்ட்டி… சிக்கிய பிரபல நடிகரின் மகள்.. BIGGBOSS டைட்டில் வின்னர் மற்றும் எம்பியின் மகன் கைது..!!

Author: Babu Lakshmanan
4 April 2022, 10:44 am

நள்ளிரவு போதை பங்கேற்ற பிரபல நடிகரின் மகள் உள்பட 144 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போதை விருந்து நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று அதிகாலை 3 மணியளவில் சம்பந்தப்பட்ட ஓட்டலில் போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது, சுமார் 100க்கும் மேற்பட்டோர் போதைப் பொருட்களை பயன்படுத்திக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, போதை பார்ட்டியில் பங்கேற்று போதை மருந்துகளை உட்கொண்டிருந்ததாக 144 பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். அதில், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்று தமிழ் படத்தில் நடித்துள்ள நடிகை நிஹாரிகாவும் ஒருவராவார்.

இவர், தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சீரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் ஆவார்.

Tollywood: Niharika Konidela in Chiranjeevi's Acharya?

மேலும், பின்னணி பாடகரும், தெலுங்கு பிக் பாஸ் டைட்டில் வின்னரும் ராகுல், முன்னாள் டிஜிபியின் மகள், தெலுங்கு தேசம் எம்பியின் மகன் உட்பட ஏராளமான பிரபலங்கள் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.

இதுகுறித்து ஹைதராபாத் போலீஸார் கூறுகையில், “ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் தனிப்படை நடத்திய சோதனையில் பலர் சிக்கியுள்ளனர். இதில் 35 பேர் பெண்கள்,” என்று தெரிவித்தனர்.

தெலுங்கு பிரபலங்களில் முக்கிய புள்ளிகளின் வாரிசுகள் போதை பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • GOAT in Small Screens இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
  • Views: - 1706

    0

    0