டெலிவரி பாய்ஸ், வீட்டுப் பணியாளர்கள் லிஃப்ட்டை பயன்படுத்தினால் ரூ.1000 அபராதம் ; சர்ச்சையை கிளப்பிய நோட்டீஸ்.. கிளம்பிய கடும் எதிர்ப்பு

Author: Babu Lakshmanan
28 November 2023, 12:38 pm

ஐதராபாத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள லிஃப்ட்டை டெலிவரி பாய்ஸ் உள்ளிட்டோர் பயன்படுத்தக் கூடாது என்று ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஹவுசிங் சொசைட்டி ஒன்று, தங்களின் குடியிருப்புகளுக்கு வரும் வீட்டு பணியாளர்கள் மற்றும் டெலிவரி பாய்ஸ் உள்ளிட்டோர் லிஃப்ட் பயன்படுத்தக் கூடாது என்றும், மீறினால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கத்தின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது பாரபட்சமான நடத்தை என்றும், இது போன்ற நடவடிக்கைகளை யாரும் மேற்கொள்ளக்கூடாது எனவும் கூறி வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ