மகளிர் கிரிக்கெட் அணியினர் பயணித்த பேருந்தில் மது அருந்தியதால் சர்ச்சை ; மூத்த பயிற்சியாளருக்கு தடை விதிப்பு

Author: Babu Lakshmanan
16 February 2024, 5:02 pm

ஹைதராபாத் மகளிர் கிரிக்கெட் அணி பயணித்த பேருந்தில் மது அருந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த பயிற்சியாளருக்கு தடை விதிக்கப்பட்டது.

ஹைதராபாத் மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக பணியில் இருந்தவர் வித்யுத்ஜெய்சிம்மா. கடந்த 15ஆம் தேதி சீனியர் பெண்கள் அணியை பயிற்சிக்காக பேருந்து ஒன்றில் அழைத்து சென்றபோது, அதே பேருந்தில் வித்யுத்ஜெய்சிம்மா மது பாட்டிலை உடன் எடுத்து சென்று மது அருந்தியுள்ளார்.

அவர் பேருந்தில் மது அருந்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. மேலும், செய்தி தொலைக்காட்சிகளிலும் இந்த சம்பவம் செய்தியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்ட ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேசன், பயிற்சியாளர் வித்யுத்ஜெய்சிம்மா மறு உத்தரவு வரும்வரை சுயமாக கிரிக்கெட் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 504

    0

    0