நான் வீட்டுச்சிறையில் உள்ளேன்… அமைதி திரும்பியது என தம்பட்டம் அடிக்கறாங்க.. எல்லாமே நாடகம் : காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஆதங்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2022, 11:51 am

தான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார். அவர் நேற்று ரஜோரி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இதனை தொடந்து ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். சுற்றுப்பயணத்தின் 2-ம் நாளான இன்று பாரமுல்லா மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார்.

இந்நிலையில், தான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மெகபூபா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமைதி நிலை திரும்பிவிட்டது என உள்துறை அமைச்சர் தம்பட்டம் அடித்துவரும் நிலையில் பத்தன் பகுதியில் உள்ள எனது கட்சி தொண்டரில் இல்ல திருமண செல்ல நினைத்ததால் நான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளேன்.

முன்னாள் முதலமைச்சரின் அடிப்படை உரிமை சுலபமாக ரத்து செய்யப்படும்போது, சாமானியர்களின் அவல நிலையை நினைத்துப்பார்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!