INDIA கூட்டணி பெயரை மாற்ற பல முறை கூறினேன்.. கூட்டணியில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்த நிதிஷ்குமார்!
Author: Udayachandran RadhaKrishnan31 January 2024, 1:57 pm
INDIA கூட்டணி பெயரை மாற்ற பல முறை கூறினேன்.. கூட்டணியில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்த நிதிஷ்குமார்!
இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். பீகாரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வேறு பெயரை வைக்க கூறினேன். இந்தியா கூட்டணியின் பெயரை மாற்றுவதற்கு நான் பலமுறை வலியுறுத்தினேன். ஆனால், எனது பேச்சை கேட்காமல் இந்தியா என்ற பெயரை முடிவு செய்தனர்.
எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என இதுவரை இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் முடிவு செய்யவில்லை. என்னால் கடுமையாக வலியுறுத்தப்பட்ட பல யோசனைகள் ஏற்கப்படவில்லை.
இதுபோன்று சில முரண்பாடுகள் ஏற்பட்டதால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினேன் என்றார். மேலும், நான் பாஜக கட்சியுடன் சேர்ந்து பீகார் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.