எல்லாத்தையும் இழந்தேன்.. ஆனால் இப்போது… பாஜகவுக்கு மாஸ் பதிலடி கொடுத்த எம்பி மஹூவா மொய்த்ரா!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2024, 6:54 pm

எம்.பி பதவி பறிக்கப்பட்ட பின் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா மக்களவையில் இன்று பாஜகவுக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா கூறியதாவது:-கடந்த வருடத்தில் பலர் என்னை பார்த்து மொய்த்ரா நீங்கள் நிறைய இழந்துவிட்டீர்கள் என்றனர்.

ஆம். நான் என்னுடைய பதவியை இழந்துவிட்டேன். வீட்டை இழந்துவிட்டேன். ஒரு அறுவை சிகிச்சையின்போது எனது கர்ப்பப்பையை இழந்துவிட்டேன்.

நான் எதை பெற்றேன் என தெரியுமா? ராகுல் சொன்னது போல பயத்தில் இருந்து விடுதலை பெற்றேன். உங்களை பார்த்து நான் பயப்பட மாட்டேன். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் | குடியரசுத் தலைவர் செங்கோலுடன் அழைத்து வரப்பட்டார். மன்னர் ஆட்சியின் அடையாளம்தான் செங்கோல். ஜனநாயக நாட்டிற்கு செங்கோல் எதற்கு?”

மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, Musalman, Mulla, Madrasa, Mutton 2 M-ல் தொடங்கும் அனைத்து வார்த்தைகளையும் பயன்படுத்தினார். ஆனால், ஒரு வார்த்தையை மட்டும் அவர் பயன்படுத்தவில்லை. அது MANIPUR”.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!