Congress ஆட்சி வந்தால் மாட்டிறைச்சி சாப்பிட அனுமதி அளித்துவிடுவார்கள்… யோகி ஆதித்யநாத் பேச்சால் சர்ச்சை!
Author: Udayachandran RadhaKrishnan28 April 2024, 4:47 pm
Congress ஆட்சி வந்தால் மாட்டிறைச்சி சாப்பிட அனுமதி அளித்துவிடுவார்கள்… யோகி ஆதித்யநாத் பேச்சால் சர்ச்சை!
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைக் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாட்டிறைச்சி உண்பதை அனுமதித்துவிடுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மாட்டிறைச்சி உண்பதை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்துக்கள் பசுவைப் புனிதமாகக் கருதுகிறார்கள். இதனால் இங்குள்ள மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்கிறது.
அப்படியிருக்கும் போது இதில் முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்கும் காங்கிரஸின் முயற்சி யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார். முன்னதாக வெள்ளிக்கிழமை உத்தரப் பிரதேசத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசும் போதும் சிறுபான்மையினருக்கு மாட்டிறைச்சி உண்ணும் உரிமையைக் காங்கிரஸ் கட்சி வழங்க விரும்புவதாக யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.