காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் : பிரதமர் மோடி பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2024, 1:24 pm

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் : பிரதமர் மோடி பேச்சு!

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன.

எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமா நடந்து வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேநதிர மோடி பங்கேற்றார்.

அந்த பிரச்சார கூட்டத்தில் அவர் பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்கு ஆபத்து என்றும் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் விடுவார்கள் என்றும் பரபரப்பாக பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், சமாஜ்வாடியும் காங்கிரஸும் ஆட்சிக்கு வந்தால் பகவான் ராமர் மீண்டும் கூடாரத்தில் அமர்ந்துவிடுவார்.

ராமர் கோவிலுக்குள் புல்டோசர் ஓட்டுவார்கள். புல்டோசரை எங்கு இயக்க வேண்டும், எங்கு ஓடக்கூடாது என்பதை உ.பி முதல்வர் யோகியிடம் அவர்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: நீங்க பெண்களின் காவலரா..? எதிர்க்கட்சி தலைவராக அல்ல… ஒரு தந்தையாக கடுமையாக கண்டிக்கிறேன் ; திமுக மீது இபிஎஸ் ஆவேசம்!!

அயோத்தி ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாற்ற விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசியுள்ளார். இது சாத்தியமாகுமா என்று சிலர் நினைக்கலாம்.

ஆனால் இதனை செய்ய அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதுதான் அவர்களின் சாதனை பதிவு. அவர்களுக்கு நாடு ஒரு பொருட்டே இல்லை. குடும்பம், பதவி இதுதான் அவர்களுக்கு முக்கியம் என பேசினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!