கார்ப்பரேட்டுகளை பற்றி கேள்வி கேட்டால் கஜினி முகமது பற்றி பேசுவார்கள்.. மக்களவையில் கொந்தளித்த எம்பி சு.வெங்கடேசன்!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2024, 2:43 pm

கார்ப்பரேட்டுகளை பற்றி கேள்வி கேட்டால் கஜினி முகமது பற்றி பேசுவார்கள்.. மக்களவையில் கொந்தளித்த எம்பி சு.வெங்கடேசன்!

மக்களவையில் பேசிய மதுரை லோக்சபா தொகுதி சு.வெங்கடேசன் , மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். சு.வெங்கடேசன் எம்பி கூறியதாவது:-சில உயிர்கள் ஒளிக்கு அஞ்சி இருளிலே வாழும், சில மனிதர்கள் நிகழ்காலத்திற்கு அஞ்சி கடந்த காலத்திலே வாழ்வார்கள்.

அதேபோலத்தான் சில கட்சிகளும்… தேர்தல் வந்துவிட்டால் நாங்கள் எல்லாம் வளர்ச்சியைப் பற்றி, வேலையின்மை பற்றி, வறுமையைப் பற்றி பேசினால் அவர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படையெடுப்பைப் பற்றிப் பேசுவார்கள்.

600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆக்கிரமிப்பைப் பற்றிப் பேசுவார்கள். நாங்கள் பணவீக்கத்தைப் பற்றிப் பேசினால், அவர்கள் பாபரைப் பற்றிப் பேசுவார்கள்,நாங்கள் கார்ப்பரேட்டுகளைப் பற்றிப் பேசினால், அவர்கள் கஜினி முகமதைப் பற்றிப் பேசுவார்கள்.

கடந்த காலத்தைக் கழித்து விட்டால், அவர்களிடம் எதிர்காலத்தைச் சந்திக்கிற எந்த ஒரு கருவியும் இல்லை. 2024 இந்தியாவின் வளர்ச்சி, உலக வளர்ச்சியைப் பற்றிப் பேசச் சொன்னால் இந்த தேர்தல் யுத்தத்தை துவங்கும்பொழுது பத்து ஆண்டுகள் பின்னால் போய் நின்று கொண்டிருப்பது இந்த அரசினுடைய தோல்வியின் இன்னொரு அடையாளம். இவ்வாறு அவர் பேசினார்.

  • Maharaja movie box office in China பிரமாண்டத்தை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி.. சீன பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் VJS!
  • Views: - 376

    0

    0