கலவரக்காரர்களை கண்டால் சுட்டு தள்ளுங்கள் : வெடித்த கலவரம்… மணிப்பூர் ஆளுநர் அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2023, 7:33 pm

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினரின் போராட்டத்தில் மணிப்பூரில் வன்முறை வெடித்தது. மெய்டேய் சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடி (எஸ்டி) பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து மாணவர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது.

டோர்பாங் பகுதியில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையே வன்முறை நடந்துள்ளது. இதை தொடர்ந்து மணிப்பூரின் எட்டு மாவட்டங்களில் புதன்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் முழு வடகிழக்கு மாநிலத்திலும் மொபைல் சேவைகள் சேவைகள் நிறுத்தப்பட்டன. நிலைமை பதற்றமாகவே உள்ளது.மாநிலம் முழுவதும் மொபைல்-இன்டர்நெட் சேவைகள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், போராட்டக்காரர்களால், மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், அம்மாநில கவர்னர் அதிரடி உத்தரவை எடுத்துள்ளார்.

கலவரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், கலவரத்தை கட்டுப்படுத்த போராட்டக்காரர்களை கண்டதும் சுட அம்மாநில கவர்னர் உத்தரவிட்டு உள்ளார். மேலும், 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!