நிதிஷ்குமாரை சமாதானப்படுத்த முக்கிய பதவி.. இண்டியா கூட்டணியின் பலே திட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan3 January 2024, 4:00 pm
நிதிஷ்குமாரை சமாதானப்படுத்த முக்கிய பதவி.. இண்டியா கூட்டணியின் பலே திட்டம்!!
2024ஆம் ஆண்டு துவங்கியது தேர்தல் களத்தில் சூடு பிடித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற வாய்ப்புள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் அதற்கான பணிகளை விரைவுப்படுத்தி உள்ளன.
கட்சி பாகுபாடுகளை மறந்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திமுக உள்ளிட்ட 28 கட்சிகள் கைகோர்த்து இந்தியா என்ற கூட்டணி அமைத்துள்ளது.
இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிதிஷ் குமார் ஹிந்தியில் பேசியதை முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி டிஆர் பாலுவுக்கு புரியவில்லை. இதையடுத்து நிதிஷ் குமாரின் கட்சியை சேர்ந்த எம்பியை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ய டிஆர் பாலு கூறினார். இதற்கு நிதிஷ் குமார் கடிந்து கொண்டார். ஹிந்தி கற்று கொள்ள வேண்டும் என காட்டமாக தெரிவித்தார். இது விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில் தான் நிதிஷ் குமாருக்கு தற்போது ‛இந்தியா’ கூட்டணியில் முக்கிய பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ‛இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை நிதிஷ் குமாருக்கு வழங்கி அவரை சமாதானம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிதிஷ்குமாருக்கு இந்த பொறுப்பு வழங்கியது குறித்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அணி, கெஜ்ரிவால், லாலு பிரசாத் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
எப்படியோ நிதிஷ்குமாரை சமாதானப்படுத்த இண்டியா கூட்டணி எடுத்துள்ள முயற்சி வீண் போகவில்லை. ஆனால் தொடர்ந்து இண்டியா கூட்டணியால் நடத்தப்படும் ஆலோசனையில் திமுக எவ்வாறு நடந்து கொள்ள போகிறது என்பதை பொறுத்துத்தான் நிதிஷ் கூட்டணியில் இருப்பாரா இல்லையா என்பது தெரியவரும்.
0
0