அடச்சீ.. பிஞ்சுனு கூட பாக்கலியே.. நான்காம் வகுப்பு மாணவியை சீண்டிய பள்ளி முதல்வர்..!

Author: Vignesh
2 August 2024, 8:11 pm

ஆந்திராவில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் நான்காம் வகுப்பு மாணவிக்கு பாலியியல் சீண்டிய நிலையில், சித்தியிடம் மாணவி கூறியதால் பள்ளி முதல்வரை போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அதிமூர்த்தி நகரில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமியை பள்ளி முதல்வர் ஆஞ்சநேயுலு கவுட் பள்ளியில் உள்ள அவரது அறைக்கு அழைத்து பாலியியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார்.

இதேபோன்று, கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகளை தனது அறைக்கு அழைத்து சென்று சாக்லேட், பணம் தருவதாக கூறி பாலியியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொன்று விடுவேன் என்றும், அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் பல சிறுமிகள் வெளியே கூற பயத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், ஒரு சிறுமிக்கு சிறுநீர் கழிக்க முடியாமல் வலி என்று தனது சித்திக்கு கூறி நடந்ததை கூறியதால் உண்மை விவகாரம் தெரிய வந்தது. இதனையடுத்து, சக மாணவர்களின் பெற்றோருடன் போலீசாரை வரவழைத்து ஆஞ்சநேயுலு கவுட் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டதாக விளக்கினார்.

இது குறித்து பெற்றோர் அளித்த புகாரை அடுத்து உடனடியாக இரண்டாவது நகர போலீசார் ஆஞ்சநேயுலு கவுட்டை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாணவர் சங்கத்தினர் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு அந்த பள்ளியில் லைசன்சை ரத்து செய்து அந்த பள்ளி மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!