எலும்பு துண்டு எங்க டா?.. அடிதடியில் முடிந்த திருமண விருந்து 8 பேரின் மண்டை உடைப்பு..!

Author: Vignesh
30 August 2024, 9:45 am

திருமண நிகழ்ச்சியில் எலும்பு துண்டுக்கு ஏற்பட்ட சண்டையால், கற்கள், கட்டைகள் ஆகியவற்றால் தாக்கியதில் எட்டு பேரின் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது, குறித்து 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள நவிப்பேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் அசைவ விருந்து வழங்கப்பட்டது. விருந்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவில் மட்டன் துண்டுகளும் எலும்பும் குறைவாக இருப்பதாக மணமகன் தரப்பினர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக மணமகன் தரப்பினருக்கும் மணமகள் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி சண்டையாக மாறியது.

சண்டை மோதலாக மாறி ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் கட்டைகள், கற்கள் ஆகியவற்றால் கடுமையாக தாக்கிக் கொண்டனர். அப்போது, அவர்களில் பலர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தீவிர சண்டை ஏற்பட்டு நடை பெற்ற தாக்குதலில் எட்டு பேருக்கு மண்டை உடைந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி காயமடைந்தவர்களை நிஜாமாபாத் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

எலும்பு துண்டுக்கு ஏற்பட்ட மோதல் தொடர்பாக 19 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை கைது காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகின்றனர். திருமண விருந்து நிகழ்ச்சியில் எலும்பு துண்டுக்காக ஏற்பட்ட சண்டை மோதலாக மாறி எட்டு பேர் மண்டை உடைந்து 19 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பேசு பொருளாக மாறி உள்ளது.

  • Cwc Pugazh Ask Vote To Bigg Boss Contestants நம்ம பொண்ணு பிக் பாஸ்ல ஜெயிக்கணும்.. ஓட்டு போடுங்க : நடிகர் புகழ் வேண்டுகோள்!
  • Views: - 261

    0

    0