அண்ணியுடன் தகாத தொடர்பு… உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த அண்ணன் : கதையை முடித்த தம்பி.!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2023, 1:46 pm

அண்ணியுடன் தகாத தொடர்பு… உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த அண்ணன் : தம்பி செய்த கொடூரம்..!!!

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில் புர்காஜி பகுதியைச் சேர்ந்தவர் சாகர் அகமது ( வயது 30). இவர் தனது மனைவி ஆயிஷாவுடன் வசித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 6ஆம் தேதி சாகர் திடீரென மாயமானார்.

தனது கணவரை காணவில்லை என மனைவி ஆயிஷா அடுத்த நாள் காவல்துறையிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

போலீசார் விசாரணையில் ஆயிஷா மற்றும் அவரது சாகரின் சகோதரர் சொஹைல் என்பவர் மீது சந்தேகப் பார்வை திரும்பியது. சாகரின் வளர்ப்பு சகோதரரான சொஹைல் மற்றும் அவரது மனைவி ஆயிஷாவுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக பேச்சு எழுந்த நிலையில், இருவரையும் பிடித்து காவல்துறை விசாரித்தனர்.

அப்போது தான் அதிர்ச்சி உண்மை வெளியே வந்தது. ஆயிஷாவுக்கும் சொஹைலுக்கும் நீண்ட காலமாகவே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது கணவர் சாகருக்கும் தெரியவந்த நிலையில், மனைவியை அவர் கண்டித்து வந்துள்ளார்.

அதை மீறியும் இருவரின் தொடர்பும் நீடித்து வந்துள்ளது. கடந்த ஜூன் 5ஆம் தேதி அன்று தனது மனைவி ஆயிஷா சொஹைலுடன் நெருக்கமாக இருந்ததை கணவர் சாகர் பார்த்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தம்பதி இருவருக்கும் கடும் சண்டை ஏற்பட்ட நிலையில், இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய ஆயிஷாவும் சொஹைலும் திட்டமிட்டனர்.

அதன்படி, இருவரும் சாகரை கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை வீட்டில் இருந்த செப்டிக் டேங்க் குழியில் புதைத்துள்ளனர். பின்னர் தான் கணவரை காணவில்லை என ஆயிஷா நாடகமாடியுள்ளார்.

கைது செய்யப்பட்ட வளர்ப்பு தம்பி

இருவரிடமும் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற காவல்துறை, புதைக்கப்பட்ட சாகரின் உடலை மலக்குழியில் இருந்து தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து. மேலும், ஆயிஷா மற்றும் சொஹைல் மீது கொலை வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!