மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு : அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியான அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2023, 10:05 pm

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு : அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியான அறிவிப்பு!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் 2022 இல் அகவிலைப்படியை 4.23 சதவீதம் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. மத்திய அரசு 4 சதவீதம் வழங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதற்கு முன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி 38 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

அது 2002 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. சென்ற ஆண்டில் மட்டும் மூன்று முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசு அதன் கீழ் பணிபுரியும் ஒரு கோடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் இதனை 42 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

2024 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த அகவிலைப்படி உயர் அமல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 323

    0

    0