வாகா எல்லையில் களைகட்டிய கொடியிறக்கும் நிகழ்ச்சி ; பார்வையாளர்களை கவர்ந்த ராணுவ வீரர்களின் கம்பீர நடை!!

Author: Babu Lakshmanan
15 August 2022, 7:27 pm

75வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா – பாகிஸ்தான் எல்லையான வாகாவில் கொடியிறக்கும் நிகழ்ச்சியில் இந்திய ராணுவ வீரர்களின் கம்பீர நடை பார்வையாளர்களை உற்சாகமடைய செய்தது

நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் இன்று பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி உரை நிகழ்த்தினார். இதன் தொடர்ச்சியாக, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள இந்திய – பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியான வாகாவில் கொடியிறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.

இதில், பெண் கமாண்டோக்களின் சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. இதையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் மிடுக்கான நடை, கம்பீரத்துடன் பேரணி நடைபெற்றது. இன்று சுதந்திர தினம் என்பதால் இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர் வாகா எல்லை களை கட்டியது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?