முடிந்தது இண்டியா கூட்டணி ஆலோசனை.. பாஜகவுக்கு எதிராக முக்கிய முடிவை அறிவித்த காங்கிரஸ் தலைவர்!!
Author: Udayachandran RadhaKrishnan19 December 2023, 7:46 pm
முடிந்தது இண்டியா கூட்டணி ஆலோசனை.. பாஜகவுக்கு எதிராக முக்கிய முடிவை அறிவித்த காங்கிரஸ் தலைவர்!!
இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட கூட்டணியில் உள்ள 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா கூட்டணி சார்பில் வரும் டிசம்பர் 22ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும்.
கட்டடம் திறப்பு விழாவுக்கு செல்லும் பிரதமர் மோடி நாடாளுமன்றம் வர மறுக்கிறார். நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்பதில் தவறேதும் இல்லை என தெரிவித்தார்.