எல்லைத் தாண்டி சீன வீரர்கள் அடாவடி… எகிறி அடித்த இந்திய ராணுவம் ; வைரலாகும் வீடியோ.. குவியும் சல்யூட்..!!

Author: Babu Lakshmanan
13 December 2022, 9:51 pm

அருணாச்சால பிரதேச எல்லையில் இந்தியா – சீன ராணுவ வீரர்கள் மோதிக் கொண்ட சம்பவம் குறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 9ம் தேதி அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தவாங் பகுதிக்கு அருகே உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில், சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றுள்ளனர். குறிப்பாக சீன வீரர்கள் எல்லைக்கு அருகே சட்டவிரோதமாக வேலி அமைக்க முயற்சித்துள்ளனர். அப்போது, அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், உடனே சீன வீரர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நீடித்த இந்த மோதலில் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருதரப்பினரும் விலகி, தங்கள் பகுதிக்கு திரும்பி விட்டனர்.

https://twitter.com/i/status/1602690394336432128

இந்த நிலையில், எல்லை தாண்டி ஆக்கிரமிக்க முயன்ற சீன வீரர்களை, இந்திய ராணுவ வீரர்கள் கம்பீரமாக தடுத்து நிறுத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், கட்டை மற்றும் கம்பியால் சீனவீரர்களை அடித்து, புறமுதுகை காட்டி ஓட விட்ட வீடியோ காட்சிகள் டிரெண்டாகி வருகிறது. திடமாக நின்று போராடிய இந்திய வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

  • Sawadeeka Songஅட்டகாசகமாக வெளிவந்த விடாமுயற்சி “Sawadeeka”பாடல்…இருங்க பாய் இது ஆரம்பம் மட்டும் தான்..!
  • Views: - 578

    0

    0