இதைக்கேட்டால் ஆடிப் போயிடுவீங்க… இந்தியாவில் உள்ள சொத்துக்களில் 40% அவங்க கிட்டதான் இருக்கு : ஆய்வில் வெளியான பகீர் தகவல்!!

Author: Babu Lakshmanan
17 January 2023, 1:23 pm

இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் குறித்து ஆய்வில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் குறித்து ஆய்வை இங்கிலாந்தை சேர்ந்த ‘ஆக்ஸ்பேம் இண்டர்நேஷனல்’ அமைப்பு நடத்தியது. இதன் அறிக்கையை உலக பொருளாதார கூட்டமைப்பு ஆண்டுக் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது.

அதில், இந்தியாவில் ஆண் தொழிலாளியின் சம்பளம் ஒரு ரூபாய் என்றால், பெண் தொழிலாளியின் சம்பளம் 63 பைசா என்ற அளவில் தான் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2020-ல் 102 ஆக இருந்த இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 2022-ல் 166 ஆக அதிகரித்து விட்டதாகவும், நாட்டின் முதல் 100 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து 54.12 லட்சம் கோடியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டது.

இதன் முலம் இந்தியாவின் 18 மாத பட்ஜெட் செலவை எதிர்கொள்ள முடியும் என்றும், கோடீஸ்வரர்களுடன் ஒப்பிடும்போது ஏழைகள் தங்கள் வருமானத்தில் இருந்து அதிக வரி செலுத்துவதாகவும், முக்கியமாக அத்தியாவசியப் பொருள்கள், சேவைகளுக்காக வரி செலுத்துவது அதிகம் உள்ளதாக தெரிவிக்கும் அறிக்கையில், இந்த நிலையை மாற்ற வரி விதிப்பு முறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒரு சதவீதம் பேரிடம் நாட்டின் ஒட்டுமொத்த செல்வ வளத்தில் 40 சதவீதம் குவிந்துள்ளதாகவும், வரி விதிப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளாவிட்டால் இது அதிகரிக்கவே செய்யும் என்றும், ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவதும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதும் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 433

    0

    0