இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.. எப்போது கிடைக்கும் என்ற வார்த்தையை மக்கள் மறந்துவிட்டனர் : நிர்மலா சீதாராமன் பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2023, 1:27 pm

இன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலுரை அளிப்பார் என கூறப்பட்ட நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பேசுகையில், கடந்த 2013 ஆம் ஆண்டில், மோர்கன் ஸ்டான்லி எனும் பன்னாட்டு நிதி அமைப்பு, இந்தியாவை உலகின் உலகின் ஐந்து பலவீனமான பொருளாதார நாடுகளின் பட்டியலில் சேர்த்தார். இந்தியா பலவீனமான பொருளாதார நாடாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது அதே மோர்கன் ஸ்டான்லி நிதி அமைப்பு இந்திய பொருளாதாரத்தை குறிப்பிடுகையில், அதிக பொருளாதார மதிப்பீட்டைக் கொண்ட நாடாக குறிப்பிட்டார். கடந்த 9 ஆண்டுகளில், நமது அரசாங்கத்தின் கொள்கைகளால் – கோவிட் தொற்று உலகம் முழுக்க முடங்கி இருந்தாலும் இந்திய பொருளாதாரம் உயர்ந்து வளர்ச்சியை கண்டது.

இன்று நாம் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கிறோம். இந்தியா தற்போது தனது எதிர்கால வளர்ச்சி குறித்து நம்பிக்கையுடனும் நேர்மறையாகவும் இருக்கும் ஒரு அரிய நிலையில் உள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், மக்கள் தற்போது எப்போது கிடைக்கும், எப்போது உருவாகும் என்ற வார்தைகளை மறந்துவிட்டனர் என குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, ​​மக்கள் மின்சாரம் எப்போது கிடைக்கும் என்றார்கள். தற்போது மின்சாரம் எல்லா பகுதியிலும் கிடைக்கிறது.

சமையல் கேஸ் இணைப்பு எங்கே என்றார்கள். தற்போது சமையல் கேஸ் இணைப்பு எல்லோரிடமும் இருக்கிறது. விமான நிலையம் எங்கே என்றார்கள் இப்போது விமான நிலையம் இருக்கிறது என்றார்கள். என கடந்த கால காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்தும் தனது உரையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?
  • Close menu