இன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலுரை அளிப்பார் என கூறப்பட்ட நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பேசுகையில், கடந்த 2013 ஆம் ஆண்டில், மோர்கன் ஸ்டான்லி எனும் பன்னாட்டு நிதி அமைப்பு, இந்தியாவை உலகின் உலகின் ஐந்து பலவீனமான பொருளாதார நாடுகளின் பட்டியலில் சேர்த்தார். இந்தியா பலவீனமான பொருளாதார நாடாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அதே மோர்கன் ஸ்டான்லி நிதி அமைப்பு இந்திய பொருளாதாரத்தை குறிப்பிடுகையில், அதிக பொருளாதார மதிப்பீட்டைக் கொண்ட நாடாக குறிப்பிட்டார். கடந்த 9 ஆண்டுகளில், நமது அரசாங்கத்தின் கொள்கைகளால் – கோவிட் தொற்று உலகம் முழுக்க முடங்கி இருந்தாலும் இந்திய பொருளாதாரம் உயர்ந்து வளர்ச்சியை கண்டது.
இன்று நாம் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கிறோம். இந்தியா தற்போது தனது எதிர்கால வளர்ச்சி குறித்து நம்பிக்கையுடனும் நேர்மறையாகவும் இருக்கும் ஒரு அரிய நிலையில் உள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், மக்கள் தற்போது எப்போது கிடைக்கும், எப்போது உருவாகும் என்ற வார்தைகளை மறந்துவிட்டனர் என குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, மக்கள் மின்சாரம் எப்போது கிடைக்கும் என்றார்கள். தற்போது மின்சாரம் எல்லா பகுதியிலும் கிடைக்கிறது.
சமையல் கேஸ் இணைப்பு எங்கே என்றார்கள். தற்போது சமையல் கேஸ் இணைப்பு எல்லோரிடமும் இருக்கிறது. விமான நிலையம் எங்கே என்றார்கள் இப்போது விமான நிலையம் இருக்கிறது என்றார்கள். என கடந்த கால காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்தும் தனது உரையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.