இந்தியாவின் கடைசி சதி வழக்கு.. 37 ஆண்டுகளுக்குப் பின் 8 பேர் விடுதலை!

Author: Hariharasudhan
11 October 2024, 4:18 pm

ராஜஸ்தானில் கடந்த 1988-ல் நிகழ்ந்த கடைசி சதி வழக்கில் இறுதியாக 8 பேரையும் விடுவித்து ராஜஸ்தான் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெய்ப்பூர்: முற்கால இந்தியாவில், கணவர் இறந்துவிட்டால் மனைவி கணவரை எரிக்கும் தீயிலே குதித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும். இதுவே சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் என அழைக்கப்பட்டது. இது இந்து மதப்படி புனிதமாகவும் அப்போது கருதப்பட்டது. பின்னர், இதற்கு எதிராக எழுந்த போராட்டத்தால் சதிக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே கொடூரமான முறையில் அரங்கேறியது.

அந்த வகையில், கடந்த 1987ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் டெரோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ரூப் கண்வர், தனது 24 வயது கணவரான மால் சிங் ஷேக்வாட் நோய்வாய்ப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பிறகு, அனைவரது கண் முன்னாலும் உடன்கட்டை ஏறினார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ‘சதி மாதா கி ஜெய்’ என முழக்கமிட்டனர். இவ்வாறு ரூப் கண்வர் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்டது புனிதமான ஒன்று என அவர்கள் கூறினர்.

பின்னர், இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் அளித்த புகாரின் பேரிக் செப்டம்பர் 1988ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 45 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஏனென்றால், சதிக்கு தடை விதிக்கப்பட்டதே தவிர, அதற்கான அரசியலமைப்பு விதிகள் இல்லாமல் இருந்தது. ஆனால், ரூப் கண்வர் உடன்கட்டை ஏறிய பிறகு சதிச் சட்டம் 1987 நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தான் ரூப் கண்வர் சம்பவம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதன்படி, ஒருவர் உடன்கட்டை ஏறி வற்புறுத்தினாலோ அல்லது சதியை புனிதமாகக் கருதினாலோ 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. இதன்படி, கைது செய்யப்பட்ட 45 பேரில் 32 பேர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் 1996ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ஒடிசாவில் தமிழக ரவுடியை என்கவுன்டர் செய்ய திட்டம்? பதறிப் போய் ஆட்சியர் முன் திரண்ட உறவினர்கள்!

தொடர்ந்து, மேலும் 45 பேரில் 25 பேர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் 2004ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். இந்த 25 பேரில் முன்னாள் பாஜக அமைச்சர் ராஜேந்திர ரத்தோர் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதாப் சிங் கச்சாரியவாஸ் ஆகியோரும் அடங்குவர்.

இந்த நிலையில் தான் கடந்த புதன்கிழமை இந்த வழக்கில் மீதமிருந்த எட்டு பேரும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவின் கடைசி சதி வழக்கு 37 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும், இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக சிறப்பு பொது வழக்குரைஞர் ரஞ்சீஸ் குமார் ஷர்மா கூறியுள்ளார்.

  • Thala ajith kumar Movie updates GOOD bad ugly pongal 2025குட் பேட் அக்லி படத்திற்கு பின் அஜித்தின் அடுத்த திட்டம்?
  • Views: - 190

    0

    0