மற்றொரு மைல்கல்லை எட்டியது இந்தியா.. கதிரவனை கண்காணிக்கும் ஆதித்யா எல் 1 விண்கலம் : இஸ்ரோ புதிய சாதனை!!
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியை சென்றைடைந்தாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த செப். 2-ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
இந்த விண்கலத்தை பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One) எனும் எல்-1 புள்ளிக்கு மிக அருகே நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 127 நாட்களாக பல்வேறு கட்டங்களை கடந்து, சூரியனை நோக்கி சீரான வேகத்தில் பயணித்து வரும் ஆதித்யா விண்கலம், இன்று மாலை எல்-1 புள்ளிக்கு அருகே நிறுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்திருந்தது.
எல்-1 புள்ளியை மையமாகக் கொண்ட சூரிய ஒளி வட்டப் பாதையில் (Halo Orbit) இன்று மாலை 4 மணியளவில் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட ‘ஆதித்யா எல்1’ விண்கலம் எல்-1 சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது, அதாவது, எல்-1 புள்ளியை சென்றைடைந்தாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனின் லாக்ராஞ்சியன் புள்ளியை அடைந்து ஹாலோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதன்படி, ஆதித்யா விண்கலம் 15 லட்சம் கிமீ தொலைவிலுள்ள எல்-1 புள்ளியை தற்போது சென்றடைந்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஹாலோ சுற்றுப்பாதையில் சுற்றியபடி, சூரியன் குறித்து ஆதித்யா விண்கலம் ஆய்வை மேற்கொள்ளும். எனவே, சூரியனின் லாக்ராஞ்சியன் புள்ளியை அடைந்து, ஆதித்யா எல்-1 விண்கலம் சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் இந்தியா மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.