இந்த பட்ஜெட்டால் 2047ல் இந்தியா உலகின் முன்னணி நாடாக திகழும் : திருப்பதியில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2023, 11:13 am

கால்நடை அபிவிருத்தி, பால்வளம், மீன்வளம் ஆகிய துறைகளுக்கான மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையான வழிபட்டார்.

சாமி கும்பிட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசி வழங்கினார்.

இந்த நிலையில் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அவர் சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2047 ஆம் ஆண்டு இந்தியாவை உலகின் முன்னணி நாடாக நிலை நிறுத்துவதற்கு உரிய பட்ஜெட் ஆக திகழ்கிறது.

இதன் மூலம் சமூக நலன், தேச அபிவிருத்தி, தொழில் துறை அபிவிருத்தி ஆகியவை சிறப்பாக தொடர்ந்து நடைபெறும் என்று அப்போது கூறினார்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?