உக்ரைனில் இருக்கும் இந்திய மக்கள் உடனே தாயகம் திரும்ப வேண்டும் : இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2022, 5:22 pm

உக்ரைனில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும் நிலையில் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ள நேட்டோ என்ற 12 நாடுகளை ஒருங்கிணைத்த கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.

ரஷ்யா தனது படைகளை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய பணியில் இல்லாத அனைத்து இந்தியர்களும் மற்றும் அனைத்து இந்திய மாணவர்களும் உக்ரைனை விட்டு தற்காலிகமாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு இயக்கப்படும் விமானங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்திய மாணவர்கள் விமானங்கள் குறித்த தகவல்களை அந்தந்த மாணவர் தங்களை அழைத்து சென்றவர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • Vidamuyarchi record-breaking release ரிலீசுக்கு முன்னே வரலாற்று சாதனை படைக்குமா ‘விடாமுயற்சி’…ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு..!