இந்தியாவின் மிக நீளமான பாலம்.. அடல் சேது பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி : வாகனங்களுக்கு கட்டணம்.. எவ்ளோ தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2024, 7:40 pm

இந்தியாவின் மிக நீளமான பாலம்.. அடல் சேது பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி : வாகனங்களுக்கு கட்டணம்.. எவ்ளோ தெரியுமா?

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) காலை மகாராஷ்டிரா மாநிலம் வருகை தந்தார். அதன் ஒருபகுதியாக, மகாராஷ்டிராவின் நாசிக்கில் ‘ஸ்வச்சதா அபியான்’ (தூய்மை இயக்கம்) நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நாசிக்கின் பஞ்சவடி பகுதியில் அமைந்துள்ள காலாராம் கோயிலின் தரையை மாப் போட்டு சுத்தம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து, இன்று பிற்பகல் 3:30 மணி அளவில், அடல் சேது என பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பை திருந்து வைத்தார். இதனையடுத்து, நவி மும்பையில் ‘உரான்-கார்கோபர் ரயில் பாதையின் 2-ம் கட்டம்’ உட்பட பல ரயில்வே திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.

இது சுமார் 21.8 கிமீ நீளமுள்ள 6-வழிப் பாலமாகும், இது கடலில் சுமார் 16.5 கிமீ நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கிமீ நீளமும் கொண்டது. 2016 டிசம்பரில் பாலத்தின் அடிக்கல்லும் பிரதமரால் நாட்ட இந்த மிகப்பெரிய பாலத்தை ரூ.17,840 செலவில் கட்டப்பட்டுள்ளது. உலகளவில் 12வது மிகப்பெரிய கடல் பாலம் இதுவாகும்.

இந்த பாலம் மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்குவதாகவும், மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கு பயண நேரத்தை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. அதாவது, மும்பையில் இருந்து நவி மும்பைக்கான பயண நேரம் 2 மணிநேரத்தில் இருந்து 20 நிமிடங்களாக குறையும்.

மேலும், இந்த பாலத்தில் பயணிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 4 சக்கர வாகனங்களுக்கான வேக உச்சவரம்பு மணிக்கு 100 கி.மீ., இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வாகனங்கள் மும்பை போர்ட்-செவ்ரி வெளியேறும் பாதையை (வெளியேறு 1C) பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கார்கள் ஒருமுறை பயணிக்க ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். ரிட்டர்ன் பயணத்திற்கும் சேர்த்து என்றால் ரூ. 375 கட்டணம் வசூலிக்கப்படும். தினசரி பாஸ் என்றால் ரூ.625 செலுத்த வேண்டும்.

மாதந்திர பாஸ் தேவைப்பாட்டால் ரூ.12,500 கட்டணமாக செலுத்த வேண்டும். மினி பஸ்களுக்கு ஒருமுறை பயணிக்க ரூ.400, ரிட்டன் பயணத்திற்கு ரூ.600 வசூல் செய்யப்படும்.

இதேபோல் தினசரி பாஸ் என்றால் 1000, மாதாந்திர பாஸ் என்றால் 20,000 – செலுத்த வேண்டும். பேருந்துகளுக்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ.830 செலுத்த வேண்டும். மாதந்திர பாஸ் என்றால் ரூ.41,500 கட்டணமாக செலுத்த வேண்டும். கனர கலாரிகள் 3 அச்சுக்கள் கொண்ட வாகனத்திற்கு ஒருமுறை பயணிக்க 905 -ம் 4-6 அச்சுக்கள் கொண்ட டிரக்குகள் என்றால் 1,300 செலுத்த வேண்டும். அதிக சுமை ஏற்றி செல்லும் டிரெய்லர் லாரிகளுக்கு ஒருமுறை பயணிக்க ரூ.1,580ம், தினசரி பாஸ் என்றால் ரூ.3,950; மாதாந்திர பாஸ் என்றால் ரூ.79,000-ம் செலுத்த வேண்டும். இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 556

    0

    0