பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்த இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணை… விளக்கம் கேட்ட பாக்., அரசு : என்ன நடந்தது?

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2022, 8:23 pm

இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணை திடீரென பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததாக அந்நாட்டு அரசு விளக்கம் கேட்டுள்ளது.

உலக நாடுகளே அச்சுறுத்தும் வகையில் உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடந்து வருகிறது. மூன்று கட்டமாக நடந்த பேச்சுவார்தை தோல்வியில் முடிந்த நிலையில் ரஷ்யா தாக்குதலில் தீவிரம் காட்டி வருகிறது.

Ukraine War Live Updates: Not Trying To "Overthrow" Ukrainian Government,  Says Russia

இந்த போருக்கு மத்தியயில் இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணை ஒன்று கடந்த மார்ச் 9ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்துள்ளதாக பாக் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து பேசிய பாகிஸ்தான் விமானப்படை மேஜர் ஜெனரல் பாபர் இஃப்திகார், கடந்த புதன்கிழமை மாலை 6.50 மணிக்கு இந்தியாவில் ஹிரியானா மாநிலம் சிறுசா நகரத்தில் இருந்து ஏவப்பட்டஇஅதிவேக ஏவுகணை பாக் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மியா சானு என்ற பகுதியில் விழுந்திருப்பதாவும், பாக் ராணுவம் மேற்கொண்ட ஆய்வில் அது சூப்பர் சோனிக் வகை ஏவுகணை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் புகார்

இந்த ஏவுகணை விழுந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், தனியார் சொத்துக்கள் சில சேதமாகியுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் பாக்.,கில் விழுந்த ஏவுகணையின் பாகங்களை பறிமுதல் செய்து சோதனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

இது குறித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சக்ம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் 9ம் தேதி பராமரிப்பு பணியின் போது தவறுதலாக ஏவப்பட்ட ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்ததாக கூறப்பட்டுள்ளது.

Was it a missile? Was it BrahMos? India probing Pakistani claim of airspace  intrusion

மேலும் இந்த விபத்தில் உயிர்தேசம் ஏற்படவில்லை என்றும், உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையேயான 2005ம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி, ஏவுகணை சோதனையில் ஈடுபடுவதற்கு குறைந்தது 3 நாட்களுக்கு முன்னர் ஏவுகணை குறித்த முழு தகவல்களையும் பரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ